எப்போதும் நினைத்ததுண்டு தமிழில் எழுத வேண்டும் என்று.. வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று பார்த்த கமலஹாசன் திரைப்படம் ஒன்று தமிழில் எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அன்பே சிவம் என்று கூறி எழுத தொடங்குகிறேன் படிப்பவர்கள் மன்னிக்கவும்,நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாவது நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று முற்படுகிறேன்.
வகுப்பறையில் இன்று அதிகம் பேசிவிட்டேனோ என்ற எண்ணம் சில மணி நேரமாக உருத்திகொண்டிருகிறது.ஏனோ தெரியவில்லை புது இடமோ பழைய இடமோ நான் நானாகவே இருந்து விடுகிறேன்.சில நேரங்களில் பலனளித்தாலும் பல சமயம் எனக்கும் பிறர்க்கும் இடையூறாகவே முடிந்து விடுகிறது.விளைவு இன்று நான் இங்கு பொலம்புவது.
பேச்சைக்குறை
பிறரை பேச விடு
காதை கூர்மைப்படுத்து
அமைதி காத்தலைக் கடை பிடி
அந்த சில மணி நேரத்தில் கற்ற பாடங்கள் இவை
நண்பர்கள் என்றாலே எனக்கு இருக்கும் 3 பேரே நினைவுக்கு வருகிறார்கள்.அது இன்றும் என்றும் நிலைக்க வேண்டும்.நிலைக்கும்.புது இடம் புகுந்து சில நாட்களே ஆகிறது.இருப்பு கொள்ள வில்லை எனக்கு.சில நேரங்களில் எதுவும் வித்யாசபடவில்லை மற்ற நேரத்தில் எண்ணமோ குறை நெஞ்சை குடைகிறது
நண்பர்களைத் தேடாதே நல்ல நட்பைத் தேடு
தனிமையில் அறிவாய் உன்னை நீயே
இசை எப்போதுமே துணை போகிறது.எல்லா நேரத்திற்கும் உகுந்த பாடல்களை எவனோ ஒருவன் எழுதிவிட்டு செல்கிறான்.
Facebook -உம வர வர பொழுது போக்க உதவ நிறுத்திவிட்டது.எனக்கும் தினசரி எழுத வேண்டும் என்று ஆசை தான்.எல்லா வற்றையும் விட எழுதுவதில் எண்ணமோ ஒரு சொட்டு மகிழ்ச்சி கூடவே எழுகிறது.ஆசை உண்டு எழுத வார்த்தைகள் வர மறுக்கிறது.அதுவும் நல்லதுதான் உங்களுக்கு ;)
கோவம் வருகிறது.என் மேல்,சுற்றி இருப்பவர்கள் மேல்,இவர்கள் ஏன் இருக்கவேண்டும் என்று.இல்லாதவர்கள் மேல்,ஏன் இவர்கள் இல்லாமல் போகிறார்கள் என்று.
ஏனோ ஒரு நாள் விடுமுறை விட்டதன் பழி தீர்பதற்காக ,நான்கு நாட்களாக வெயில் பழி தீர்கிறது.வெயில் பேரை சொல்லி விடுமுறை விட்டால் கோவம் தீருமோ என்னவோ.
சில வகுப்புகளில் ஏன் தான் உட்கார்திருகோம் என்று தோன்றும்.கோவம் வரும்.படிப்பில் விளையாடுகிறார்களே என்று தோன்றும்.ஆசிரியப்பணி புனிதமானதல்லவோ?
கேள்வி கேட்க ஆள் இல்லை.கல்லூரி என்றால் ஆசிரியர்கள் இப்படித்தான் என்று அமைந்து விட்டது மாற்றம் வர வாய்ப்பும் இல்லாமல் போனது.இந்த நிலையிலும் சில ஆசிரியர்கள் உயிரை கொடுத்து பாடம் கற்பிக்கிறார்கள்.தலை வணங்க வேண்டியவர்கள் அவர்கள்
செய்திகள் பார்ப்பதை முற்றும் நிறுத்தி விட்டேன்.
ஏனோ அரசியலில் ஆர்வம் சற்றும் இல்லை
ஏமாற்றும் அரசியல்வாதிகள்
ஏமாறும் மக்கள்
மாறப்போவதில்லை நாடு.
எல்லா பாடங்களையும் விட வாழ்கை பாடமே எனக்கு மிகவும் பிடித்ததாகவும் அடிக்கடி பேசப்படும் தலைப்பாகவும் இருந்து வருகிறது.ஏனோ எனக்கு நானே அறிவுரை கூறிக்கொள்வது மிகவும் பிடித்தமான ஒரு வேலையாக உள்ளது
எழுதிவிட்டு நானே படித்து தோளில் தட்டிக்கொள்வேன்.
புத்தகங்கள்,என்றும் எப்போதும் என்னுடன் வரக்கூடிய அறிவுச்செல்வம்
ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் படிக்கிறேன்.செலவிட நேரமும் பணமும் அளவாக இருப்பதனால்.
சிறு குழந்தை ஒன்றை பேருந்தில் பார்த்தேன்.என்னை அறியாமல் சிரித்த தருணம்.பொக்கிஷம்.என்னுடைய நாள் முற்று பெற்றது.
தந்தையின் காதோரம் கதை சொல்லிக்கொண்டே வந்தது.நான் இறங்கும் வரையில் இறங்கிவிடதே என்று எண்ணிக்கொண்டே பயணித்தேன்.ஆசை நிறைவேறியது.
இன்றும் அதே இடத்தில் அதே பிச்சைக்காரன்.மற்றம் மானிடத்தத்துவம் இல்லையோ?
எண்ணங்கள் பாய்கின்றன.ஒரு கோர்வையான பதிப்பு வந்துவிட்டதா என்று படித்து பார்கிறேன்.பாதியில் நிறுத்தி,என்னுடைய ஆசைக்காக எழுதுவது.எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம்.
என்னை விட வயதில் பெரியவர்களுடன் அதிகம் நேரம் செலவிடுகிறேன்.அதனாலோ என்னவோ மெதுவாக உலகம் சுற்றுவது போல எண்ணம் எனக்கு.
எதோ ஒன்று குறைகிறது.ஏன் என்று சொல்ல வார்த்தை வர வில்லை.
எழுத நினைத்தேன்.எழுதி விட்டேன்.
ஆசை,பேராசை.நிறை வேறியது.
பற்பல எண்ணங்கள்.
நல்ல நாள்.
கொஞ்சம் மோசமான நாள்.
பல நிறங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும்.
நாளை ஞாயிறு.எழுதுகையிலே முகத்தில் மலர்ச்சி.
நாள் நிறைவுக்கு வருகிறது.
இதுவும் கடந்து போகும்.
arumai miga miga arumai...:):):):)
ReplyDeleteexactly said "Iduvum kadanthu pogum" - The phrase I often think of!!
ReplyDeleteDay by day u keep flying high! excellent talent! try writing in Tamil next few weeks my suggestion! =) keep rocking bro! dunno am much happy when i read ur blogs!! AWESOME in one simple word!!
ஆங்கிலத்தை விட நீ தமிழில் எழுதும் போது வார்த்தைகள் கவிதையாய் தெரிகின்றது. தமிழுக்கென தனி Blog போடு! :D
ReplyDeleteIt is amazing to find out how long you have traveled since I met you first and it is even more amusing to find out that you are still the same...
ReplyDelete"Idhuvum Kadanthu pogum"
"நண்பர்களைத் தேடாதே நல்ல நட்பைத் தேடு"
ReplyDeleteஉன் வாழ்கையில் என்றும் இதை மறவாதே.. ஏனெனில் உன் வாழ்கையின் இறுதி வரை வருபவர்கள் உன் பெற்றோரும் உன் நண்பர்களுமே...நீ தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ,உன் வாக்கியத்தின் அழகை கூட்டியுள்ளது.. வாழ்த்துக்கள்
Noorul,Really glad everytime I hear from you:) Sure will keep writing :)
ReplyDeleteKeer,Thanks so much :) Thamizh la avlo ezhutha mudiyuma nu therila.. another blog. sure something to think about :)
Srini,I'm really happy that you still find me the same way you have been seeing me.I wish I would remain the same through out :) You are someone I always admire :)
Ragul,Kandippa :) cannot restarin myself from mentioning you people in every single post :) :)
nice post da..
ReplyDeleteThank you Ambarish :)
ReplyDeleteReallyyyyy fantastic man..!!!! Great one..!!!
ReplyDeleteThanks so much :)
ReplyDeletedai nanba nee !!!!!!!!!vaarthaye ila y do u make me cry evry time i read ur blog!?;(
ReplyDeleteCan a single line make me cry?
ReplyDeleteThis was answered by your comment! Fortunate
Kanna "Ithuvum kadanthu pogunum" apdinu pottutu vitta paaru our gap yengayo poita da nee :-D . Good one
ReplyDeleteNanri hei ;)
ReplyDeleteதமிழ் படிப்பதே நன்றாக உள்ளது! தமிழில் பதிவெழுதுறேன்னு ஓவரா தமிழை அள்ளித் தெளிக்காம, தெரிந்த வார்த்தைகளை மட்டும் வைத்து எழுதியதற்கு கண்டிப்பா பாராட்டனும்! :) நிச்சயம் இது ஒரு நல்ல முயற்ச்சி!
ReplyDelete"எல்லா நேரத்திற்கும் உகுந்த பாடல்களை எவனோ ஒருவன் எழுதிவிட்டு செல்கிறான்."
"தந்தையின் காதோரம் கதை சொல்லிக்கொண்டே வந்தது.நான் இறங்கும் வரையில் இறங்கிவிடதே என்று எண்ணிக்கொண்டே பயணித்தேன்."
அழகு! :)
Thank you so so so much :) :)
ReplyDelete