தமிழ் கவிதை கைக்குழந்தைப்போன்றது
எவன் வரைந்தாலும் படிக்க இனிமையாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் காரணத்தாலேயே நானும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோகவிதை எழுத முனைகிறேன்
பல மோசமான, மொக்கையான கவிதைகளுக்கு இடையே சில வரிகள் திரும்பப்படிக்கும் அளவுக்கு அழகாய் அமைந்து விடுகின்றன.இருட்டில் தான் வெளிச்சத்தின் அருமை புலப்படும் அல்லவா? எனவே அவ்வாறான உளறல்களும் அழகான சில கிறுக்கல்களும்
இங்கே
மெகா சீரியல்
தொலைக்கட்சியில் அவளுக்கு சுகப்ப்ரசவமானதா
என்று நகம் கடித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்,
தொட்டிலில் குழந்தை அழுது கொண்டிருந்தது
விதி
ஜாதிக்கலவரத்தில் மூவர் மரணம்,
சந்நிதி தெருவில் காவல் அதிகரிப்பு
பார்த்திபன் கனவு
பட்டம் வாங்கிக்கொண்டிருக்கும் மகனின் கனவை கலைத்தது
"விடிஞ்சாச்சுடா வயலுக்கு போ" என்ற தாயின் குரல்
வாழ்கை
கீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்
அவளுக்கும் தெரிந்திருந்தது போலும்
மூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு
முருக்கென்றால் உயிர் என்று.
எதிர்காலம்
பச்சையாக இருப்பது வயல்,
அருகில் ஓடுவதுதான் ஆறு.
மகனுக்கு புத்தகம் பார்த்து கற்றுக்கொடுத்தான்
வருடம் 2050௦.
கருப்பு
கருப்பு, ஆகாத வண்ணமாம்
குருடனுக்கும் விளங்குவதாலோ?
தானம்
வலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்
ஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே உள்ளான்
படிப்பு
தேர்வுக்கு படிக்கவேண்டும் ஆறு மணிக்கு எழுப்பு
என்று ஆறு வயது வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு உறங்க சென்றான்
மேதாவி
இலக்கியம் படித்த தமிழாசிரியர்
இலக்கணம் சொல்லிகொண்டிருந்தார்
எடுத்துக்காட்டாக, விவசாயியின் நாட்டுப்புறப்பாடல்.
முத்தம்
ஒரே மூச்சில் அவன் காதலுக்கு பதில் கூறினாள்,
முதல் முத்தம்.
பிரிவு
சேர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின்
கதை பேசிக்கொண்டிருந்தன
சேரவே முடியாத தண்டவாளங்கள்
பக்தி
நீ கோவிலுக்குப்போகும் அந்த அரை மணி
நாத்திகனும் ஆத்திகன் ஆவான்.
எவன் வரைந்தாலும் படிக்க இனிமையாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் காரணத்தாலேயே நானும் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ

Sooper da semaya irukku! I am pimping this
ReplyDeletenanri macha :)
ReplyDeletesuper boss.. :) i liked this -
ReplyDeleteகீழே விழுந்த முறுக்கை எடுக்காதே என்றாள் மகனிடம்
அவளுக்கும் தெரிந்திருந்தது போலும்
மூன்றடி தள்ளி நடந்து வரும் பிச்சைக்காரனின் கடைசி மகனுக்கு
முருக்கென்றால் உயிர் என்று.
d best.. keep posting.. :)
Thanks da :) Sure and credit goes to you for making me start this blog :)
ReplyDeleteawesome :) Tamil la gethu :)
ReplyDeleteThank you :) :)
ReplyDelete//தானம்
ReplyDeleteவலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாதாம்
ஒரு கை உள்ளவனெல்லாம் தானம் வாங்குபவனாகவே உள்ளான்//
This is my pick of this collection! Splendid job!
ஆழமான சிந்தனைகள், (என் சிற்றறிவுக்கு இதுவே ஆழம்தான்! :D) அழகாக பரிமாறப்பட்டிருக்கின்றன!
:):)
ReplyDeleteAwesome....
ReplyDeleteThanks da :)
ReplyDeleteஅருமை அருமை அருமை, விக்னேஷ்.
ReplyDelete