Showing posts with label powerstar. Show all posts
Showing posts with label powerstar. Show all posts

Wednesday, May 30, 2012

அட நான் தெரியாம தான் கேக்கறேன்

உலகில் இரண்டு விதமான அறிவாளிகள் உண்டு. ஒன்று, தனக்கு தெரிந்ததெல்லாம் சுட்டிக்காட்டி தான் அறிவாளி என்று நிரூபிப்பவர்கள். மற்றொன்று அடுத்தவர்களுக்கு தெரியாததை எல்லாம்  சுட்டிக்காட்டி தான் அறிவாளி என்று நிரூபிப்பவர்கள். மூன்றவதாக ஒருவர் சில ஆண்டுகளாக உலா வருகிறார். அவர் வேறு யாருமல்ல, நம்ம விஜய் டிவி நீயா நானா கோபிநாத். தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி, அது எதுவும் உனக்கு தெரியவில்லை. உனக்கு தெரிந்த நாலு விஷயமும் தப்பு. என்று ஆழ்ந்த அனுதாபங்களோடு பேட்டி எடுப்பவர்களை வழியனுப்பி வைக்கும் திறமை சாலி.

எனக்கு கோபிநாத் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். என் கல்லூரிக்கு அவர் சென்ற ஆண்டு வந்திருந்தபோது கடும் கூட்டத்துக்கு நடுவே நின்று அவர் பேச்சைக்கேட்டேன். திடீரென்று என்ன ஆயிற்று அவருக்கு? நல்லத்தானையா போய்க்கிற்றுந்துது?

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்தோடு உட்காந்து நீயா நானா பார்ப்பது என் வீட்டில் ஒரு வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக நான் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஏனோஅந்த நிகழ்ச்சி இப்போதேல்லாம் கருத்துக்களை தாண்டி மக்களிடம் ஏதோ பொருளை வியாபாரம் செய்வதைப்போல் போலி ஆடம்பரங்களையே மையயமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது என்ற எண்ணம் எனக்கு. 

நல்ல வாக்குவதங்கலையே கொண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சி, குக்கர் மிக்சி குடுத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டது. விருந்தினர்கள் என்ற பேரில் சமூகத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வந்து அவர்களை தர்மசங்கடப்படுத்துவதில் என்ன ஆர்வமோ இவருக்கு, எனக்கு புரியவில்லை.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறைந்தது இரண்டு சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சிக்கு நடுவராக விளங்கும் கோபிநாத் யாரேனும் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகிறார். எந்த பக்கத்தில் இருந்து நிறைய கைத்தட்டல்கள் வருகிறதோ, எந்த கும்பல் இவரது நக்கல் நிறைந்த வாசகங்களை அதிகம் ரசிக்கின்றதோ அந்தப்பக்கமே பேசுகிறார் நடுவர் கோபிநாத். 

சில சமயங்களில் சபை மரியாதை மறந்தும் அளவு மீறியும் பல வாக்குவாதங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றது. தெரிந்தே அவமானப்படுத்துகிறாரா இல்லை அவர் இப்படித்தான என்று புரியவில்லை எனக்கு.

நல்ல கருத்துகள் இருந்தால் ****-பற்றி கவலைப்பட வேண்டாமே? சென்ற வாரம் அப்படித்தான் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். போலி கெளரவம் தான் அன்றைய தலைப்பு. அவரிடம் அதைப்பற்றி கேட்காமல் அவரை அவமானப்படுதுவதையே குறியாகக்கொண்டு கேள்வி கேட்டமாதிரியே இருந்தது. அவருக்கு எதிராக அமர்ந்திருந்தவர் ஒரு சமூகவாதி. என்றைக்கு சமூகவதிகளும் சினிமாகரர்களும் ஒத்துப்போயிருக்கின்றனர்? சங்கடமாக இருந்தது, அந்த நடிகர் ஏதோ தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு நடிகனாகவேண்டும் என்ற ஆசையை நிறைவேர்திக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அவரை ஆதரிக்காதீர்கள். என்னதான் மோசமான படங்களில் நடித்தாலும் அவர் படங்களின் மூலம் நாலு பேரின் குடும்பத்தில் அடுப்பு எரிகின்றது. அதை நீங்கள் பாராட்டவேண்டாம். சமூகத்தில் அவரை பெரிய மனிதராக பார்க்கவேண்டாம். ஒரு சம மனிதனாக பார்க்க வேண்டுமா இல்லையா? கோமாளித்தனமாக இருக்கிறார் என்பதற்காக சபையில் அமர்த்திவைத்து இவரைப்பார்த்து சிரியுங்கள் என்று சொல்வது மனித உரிமை மீறல். மனசாட்சியற்ற செயல்.

கோபிநாத் ஒரு சிறந்த தொகுப்பாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர்.

அட நான் தெரியாம தான் கேக்கறேன், கோபிநாத் எந்த அளவுக்கு சிறந்த மனிதர்?