Wednesday, May 30, 2012

அட நான் தெரியாம தான் கேக்கறேன்

உலகில் இரண்டு விதமான அறிவாளிகள் உண்டு. ஒன்று, தனக்கு தெரிந்ததெல்லாம் சுட்டிக்காட்டி தான் அறிவாளி என்று நிரூபிப்பவர்கள். மற்றொன்று அடுத்தவர்களுக்கு தெரியாததை எல்லாம்  சுட்டிக்காட்டி தான் அறிவாளி என்று நிரூபிப்பவர்கள். மூன்றவதாக ஒருவர் சில ஆண்டுகளாக உலா வருகிறார். அவர் வேறு யாருமல்ல, நம்ம விஜய் டிவி நீயா நானா கோபிநாத். தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி, அது எதுவும் உனக்கு தெரியவில்லை. உனக்கு தெரிந்த நாலு விஷயமும் தப்பு. என்று ஆழ்ந்த அனுதாபங்களோடு பேட்டி எடுப்பவர்களை வழியனுப்பி வைக்கும் திறமை சாலி.

எனக்கு கோபிநாத் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். என் கல்லூரிக்கு அவர் சென்ற ஆண்டு வந்திருந்தபோது கடும் கூட்டத்துக்கு நடுவே நின்று அவர் பேச்சைக்கேட்டேன். திடீரென்று என்ன ஆயிற்று அவருக்கு? நல்லத்தானையா போய்க்கிற்றுந்துது?

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்தோடு உட்காந்து நீயா நானா பார்ப்பது என் வீட்டில் ஒரு வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக நான் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஏனோஅந்த நிகழ்ச்சி இப்போதேல்லாம் கருத்துக்களை தாண்டி மக்களிடம் ஏதோ பொருளை வியாபாரம் செய்வதைப்போல் போலி ஆடம்பரங்களையே மையயமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது என்ற எண்ணம் எனக்கு. 

நல்ல வாக்குவதங்கலையே கொண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சி, குக்கர் மிக்சி குடுத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டது. விருந்தினர்கள் என்ற பேரில் சமூகத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வந்து அவர்களை தர்மசங்கடப்படுத்துவதில் என்ன ஆர்வமோ இவருக்கு, எனக்கு புரியவில்லை.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறைந்தது இரண்டு சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சிக்கு நடுவராக விளங்கும் கோபிநாத் யாரேனும் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகிறார். எந்த பக்கத்தில் இருந்து நிறைய கைத்தட்டல்கள் வருகிறதோ, எந்த கும்பல் இவரது நக்கல் நிறைந்த வாசகங்களை அதிகம் ரசிக்கின்றதோ அந்தப்பக்கமே பேசுகிறார் நடுவர் கோபிநாத். 

சில சமயங்களில் சபை மரியாதை மறந்தும் அளவு மீறியும் பல வாக்குவாதங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றது. தெரிந்தே அவமானப்படுத்துகிறாரா இல்லை அவர் இப்படித்தான என்று புரியவில்லை எனக்கு.

நல்ல கருத்துகள் இருந்தால் ****-பற்றி கவலைப்பட வேண்டாமே? சென்ற வாரம் அப்படித்தான் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். போலி கெளரவம் தான் அன்றைய தலைப்பு. அவரிடம் அதைப்பற்றி கேட்காமல் அவரை அவமானப்படுதுவதையே குறியாகக்கொண்டு கேள்வி கேட்டமாதிரியே இருந்தது. அவருக்கு எதிராக அமர்ந்திருந்தவர் ஒரு சமூகவாதி. என்றைக்கு சமூகவதிகளும் சினிமாகரர்களும் ஒத்துப்போயிருக்கின்றனர்? சங்கடமாக இருந்தது, அந்த நடிகர் ஏதோ தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு நடிகனாகவேண்டும் என்ற ஆசையை நிறைவேர்திக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அவரை ஆதரிக்காதீர்கள். என்னதான் மோசமான படங்களில் நடித்தாலும் அவர் படங்களின் மூலம் நாலு பேரின் குடும்பத்தில் அடுப்பு எரிகின்றது. அதை நீங்கள் பாராட்டவேண்டாம். சமூகத்தில் அவரை பெரிய மனிதராக பார்க்கவேண்டாம். ஒரு சம மனிதனாக பார்க்க வேண்டுமா இல்லையா? கோமாளித்தனமாக இருக்கிறார் என்பதற்காக சபையில் அமர்த்திவைத்து இவரைப்பார்த்து சிரியுங்கள் என்று சொல்வது மனித உரிமை மீறல். மனசாட்சியற்ற செயல்.

கோபிநாத் ஒரு சிறந்த தொகுப்பாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர்.

அட நான் தெரியாம தான் கேக்கறேன், கோபிநாத் எந்த அளவுக்கு சிறந்த மனிதர்?

10 comments:

 1. very well written! also, coat ah eppo saar maathuveenga?

  ReplyDelete
 2. Well written post. I didnt watch the episode and hence cannot comment on the content.
  Please prrof read it once more and correct the mistakes in language. ex: 'மனசாட்சியட்ட்ற' should be 'மனசாட்சியற்ற '

  ReplyDelete
  Replies
  1. *prrof should be proof. sorry for typo. Almost defeated the whole purpose of the comment. :)

   Delete
  2. Thank you so much for reading :) Yes I read through once and corrected whatever I could find. Will proof-read more carefully the next time.

   Delete
 3. Spot on! Well written article.Maybe you can write another article on the guys vs gals series that he hosted. Most of the episodes were demeaning to women.It seemed like his main intention was to show women "their place".

  ReplyDelete
 4. (Vandu Murugan Style)
  அப்படி என்ன தப்பு பண்ணிட்டான் என் கட்சி காரன்??
  ஒரு ரெண்டு விளம்பரம் எக்ஸ்ட்ராவா போட்டது தப்பா??
  இல்ல தப்பா நு கேக்குறேன்.!!

  புடிக்கலனா போஸ்டர கிழிச்சு போடு.
  அத விட்டுட்டு சபைல கூப்டு அசிங்க படுத்துற??

  இதே போல ஒரு சம்பவம் பீகார் ல கூட நடந்துச்சு,
  அவங்க இவ்ளோ மோசமா நடக்கல. . .

  ReplyDelete
 5. Actually gopi neva wanted to hurt him... He repeatedly said tat "i wanna expose de serious face of srinivasan".. Power star never listened to his words..! Power star's behavior was like 'Enna asingapaduthunga da'!!! He'd ve shared things about his past life as a doctor...!

  ReplyDelete
 6. நீயா நானா-வில் அவரோட பகுதி ஆரம்பத்தில் போலி கெளரவம் தேவை இல்லை னு பவர் ஸ்டார் சொன்னாரு. ஆனா அவர் அதை பின்பற்றலையே. அவரோட போலி முகம் மட்டும் தான் நமக்கு தெரியுது. அவர் யார் என்று யாருக்கும் தெரியலையே? அப்படி அவர் முரணா பேசும் போது அவரோட உண்மையான முகத்தை வெளி கொண்டு வரும் வகையில் கோபிநாத் எதார்த்தமான கேள்விகள் தான் கேட்டாரு. ஆனால் திரும்ப திரும்ப முரண்பாடவே பேசிட்டு இருந்தாரு பவர் ஸ்டார்.

  கொஞ்சம் கோபத்தை விலக்கி விட்டு அந்த நிகழ்ச்சியை கவனித்தால் பவர் ஸ்டார் பேசுகிற ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு போலியாக உள்ளது என்பது புரியும். பல முறை கோபிநாத் அவருக்கு "உங்கள் காமெடி முகமூடியை கழற்றி விட்டு சீரியஸா நீங்க யார் என்று காட்டி கொள்ள இந்த மேடையை பயன் படுத்தி கொள்ளுங்கள்" என்று சொல்லியும் அதை ஏற்றுக்கொள்ளாமல் காமெடியா இருந்தா தான் வளர முடியும் னு பேசிகிட்டு இருந்தாரு பவர் ஸ்டார்.

  கோபிநாத்தை குறை சொல்லுபவர்கள் ஒரு விஷயம் யோசிக்க வேண்டும். கோபிநாத் அவருடைய மருத்துவ சேவை பற்றி, அவருடைய மருத்துவமனை பற்றி, அவருடைய சமூக அக்கறை பற்றி எல்லாம் கேள்வி கேட்டும், பவர் ஸ்டார் ஒழுங்காக பதில் சொல்லாதது கோபிநாத் தப்பா, இல்லை பவர் ஸ்டார் தப்பா?

  நிகழ்ச்சியே போலி கவுரவம் பற்றித்தான் என்பதால் அது சம்பந்தமா தான் கோபிநாத் கேள்விகள் கேட்டாரு. பவர் ஸ்டாருக்கு அப்புறம் வந்த விருந்தினர் சின்ன பொண்ணுவிடம் கூட இதே மாதிரியான கேள்விகளை தான் கேட்டார் கோபிநாத். அனால், சின்ன பொண்ணு அந்த கேள்விகளை அணுகிய முறை வித்தியாசமாய் இருந்ததே.

  இதை எல்லாம் பார்க்கும் போது, எல்லாரும் கலாய்ப்பதால் கிடைக்கும் publicity அவருக்கு பிடிக்கிறதோ என்றே நினைக்க தோன்றுகிறது. "No publicity is bad publicity " என்று நினைப்பவராகவே பவர் ஸ்டார் எனக்கு தோன்றுகிறார். போலி கவுரவம் பற்றிய நிகழ்ச்சி என்று அறிந்தும் அவர் கலந்து கொள்ள சம்மதித்தது ஏன்? மறுத்திருக்கலாமே. இதனால் கொஞ்சம் பப்ளிசிட்டி கிடைக்காதா என்று தானே நிகழ்ச்சிக்கு வந்து விட்டு, நிகழ்ச்சியில் முரண்பாடாகவே பேசி விட்டு அப்புறம் நிகழ்ச்சி நடத்துபவர்களை குற்றம் சொல்வது எப்படி சரியாகும்?

  எனக்கு கடந்த பல வாரங்கள் நீயா நானா பிடிக்க வில்லை. கோபிநாத் எடுத்த நிறைய தலைப்புகள் பிடிக்க வில்லை; அதனால் எனக்கு அவர் மேல் இருந்த மரியாதை கூட குறைய ஆரம்பித்தது. முன்ன மாதிரி இப்போ அந்த நிகழ்ச்சி இல்லை. இந்த வாரம் கூட அவ்வளவு நல்ல நிகழ்ச்சி என்று சொல்ல முடியாது. அனால், ஏதோ பவர் ஸ்டார் உத்தமர் என்றும் அவரை கூப்பிட்டு வைத்து அசிங்க படுத்தி விட்டார் கோபிநாத், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சில பேர் (உன்னை சொல்ல வில்லை, charmer, அந்த FB community ஐ பற்றி சொல்கிறேன்) சொல்வதை பார்த்தால் கேலி கூத்தாக இருக்கத்தான் செய்கிறது!

  ReplyDelete