காதல், வெட்கம் மற்றும் சில கவிதைக்கு அப்பாற்பட்ட காரணங்கள்.
கையில் பட்டாம்பூச்சி வண்ணமாய்,
கடற்கரை மண்ணில் காலடியாய்,
நெஞ்சில் உந்தன் முகம்
சுவடு வைத்து போனதடி.
சென்னை நகரில்,
கோடை கால குழாவைப்போல்,
உன்னை பார்க்கையில் , தாய் மொழியும் மறந்ததடி.
இருட்டிலும் பளிச்சிடும் பற்கள்,
வேலி போட்ட மல்லிகையடி.
ஆணுக்கு நானும்
பெண்ணுக்கு நீயும்
காதலுக்கு நாமும் உவமயடி.
இதுவரை நான் படித்த
கவிதைகளுக்கு அர்த்தம் புரிய வைத்து,
இனி நான் எழுதும் கவிதைகளுக்கு அர்த்தமாய் போனாயடி.
வெண்ணிலவும் வெட்கப்படதடி.
கவித்துவம்
காதோரம் கருமயிர் காற்றடித்து
கன்னத்தில்விழ
கைவிரலால் களைந்து
கண்சிமிட்டும் கவின்காட்சியை
காணக் கண் கோடிவேண்டும்.
வெள்ளைப்பொய்
வேறொருத்திக்கு நான் எழுதிய கவிதையை படித்து
என் கன்னத்தில் குழி விழுமா? என்றாய்.
கையில் பட்டாம்பூச்சி வண்ணமாய்,
கடற்கரை மண்ணில் காலடியாய்,
நெஞ்சில் உந்தன் முகம்
சுவடு வைத்து போனதடி.
சென்னை நகரில்,
கோடை கால குழாவைப்போல்,
உன்னை பார்க்கையில் , தாய் மொழியும் மறந்ததடி.
இருட்டிலும் பளிச்சிடும் பற்கள்,
வேலி போட்ட மல்லிகையடி.
ஆணுக்கு நானும்
பெண்ணுக்கு நீயும்
காதலுக்கு நாமும் உவமயடி.
இதுவரை நான் படித்த
கவிதைகளுக்கு அர்த்தம் புரிய வைத்து,
இனி நான் எழுதும் கவிதைகளுக்கு அர்த்தமாய் போனாயடி.
இரவில் நீ குழந்தைக்கு சோறூட்டும் அழகைக்கண்டு
மேகத்தினுள் மறைந்து,வெண்ணிலவும் வெட்கப்படதடி.
கவித்துவம்
காதோரம் கருமயிர் காற்றடித்து
கன்னத்தில்விழ
கைவிரலால் களைந்து
கண்சிமிட்டும் கவின்காட்சியை
காணக் கண் கோடிவேண்டும்.
வெள்ளைப்பொய்
வேறொருத்திக்கு நான் எழுதிய கவிதையை படித்து
என் கன்னத்தில் குழி விழுமா? என்றாய்.
ஆம், என்று சொல்லி உன்னை சிரிக்கவைத்து
தேடினேன்.
உன் கன்னத்தில்.. குழி.