Saturday, July 2, 2011

தமிழ் இனி மெல்லச்சாகும்.

புதிய நண்பர்களிடம், பழக ஆரமித்த சில நாட்களில் "தமிழ் படிக்க தெரியுமா?" என்று நான் கேட்பதுண்டு. பலரும் 'இல்லை' என்ற பதிலையே தருவார்கள். மற்றவர்கள் எழுத்து கூட்டி படிக்க நேரம் ஆகிறது. பேச தெரியும் ஆனா பள்ளியில் பிரெஞ்சு படிச்சேன் சமஸ்க்ரிதம் படிச்சேன் என்றெல்லாம் கூறுவது உண்டு. வேறு மொழி தெரிந்து கொள்வதில் தவறில்லை அதுக்காக தமிழ் நாட்டில் பிறந்து, வீட்டில் தமிழ் பேசி வளர்ந்துவிட்டு தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னால் வருத்தபடதான் முடிகின்றது என்னால்.


இன்றைய கட்டத்தில் நம்மில் யாரும் தமிழ் படிப்பதும் இல்லை, தமிழ் படிப்பதும் இல்லை. பல காரணங்கள் சொல்லலாம். அரசாங்கம் மிகச்சிறப்பாக தமிழ் வளர்க்கிறது. சோகம் என்னவென்றால் அது டில்லியில் மட்டுமே. சட்ட சபையில் சட்டை அவிழாமல் இருக்க தமிழைப்பற்றி பக்கம் பக்கமாக பேசுகின்றனர். நம்மூரில் தமிழ் மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். ரகுமான் இசை அமைத்த பாடலெல்லாம் வெளியிட்டார்கள். அரசாங்கம் மாறியது, முதல் குறிக்கோளாக அந்த மாநாட்டை மக்கள் மறக்க வேண்டும் என்பதைக்கொண்டு அதை பற்றி புத்தகத்தில்கூட இல்லாதவாறு செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெற்றி தமிழக அரசுக்கு. தோல்வி தமிழுக்கு.


"என்னடா இவன் பெரிய திருவள்ளுவன் மாதிரி  தமிழ் தொண்டு பத்தி பேசறானே தமிழ் பாடத்தை எடுத்து படிக்க வேண்டியது தான?" என்று நீங்கள் கேட்பது வாஸ்தவம் தான். வயத்து பொழப்புன்னு ஒன்னு இருக்கே! தமிழை பாடமாக எடுத்து படிக்காவிட்டாலும் பொழுது போக்கிற்காக தமிழ் படிக்கலாமே? 
அனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. 


விழுக்காடு- என்ன அருமையான வார்த்தை. இந்த ஒரு வார்த்தை சொல்லிவிடும் ஒன்னாம் பகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரு மாணவன் எதற்காக வாழ்கையை செலவிடுகிறான் என்பதை. விழுக்காடு விழுக்காடு என்று மதிப்பென்னுக்க்காகவே வாழ்ந்து பாடம் படிக்கிறான். வாழ்க்கைப்பாடம் நடத்தும் தேர்வில் தோற்றுவிடுகிறான். பள்ளிக்கு பின் விழும் காட்டை தான் விழுக்காடு என்ற வார்த்தை அறிவுருத்துகிறதோ என்னவோ.


எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற விதி கொண்டுவந்தார்கள்  அதையும் ஒழுங்க செஞ்சாங்களா? இல்ல. வள்ளுவனும் தொல்காப்பியரும் எழுதின பாடல்களுக்கு நடுவே "ஒவ்வொரு பூக்களுமே" னு சினிமா பாட்டு. அதுல இலக்கணமும்  தப்பு. கவிச்சுதந்திரம் னு மழுப்பிடுவாங்க. எட்டாவது படிக்கர பையனுக்கு தெரியுமா அதெல்லாம்? யோசனை என்பதையே மறந்தாச்சு.


கலப்புத்தமிழ் உணர்ந்து  திருத்தம் செய்க னு ஒரு பகுதி. ரெண்டு மார்க் வாங்கலாம். ரெண்டு மார்க் தான னு படிக்க முயற்சி கூட  செய்வதில்லை ஒருத்தனும். இப்படி இருந்தா தமிழ் எங்க வளரும்? 


தமிழ் பாடல்களில் தமிழை விட ஆங்கிலம் அதிகமாக உள்ளது. வயலின் னு ஒரு இசைக்கருவிய மறந்தே போயாச்சு. ஒன்னு குத்து பாட்டு இல்ல மேற்கத்திய இசை. கவிதை என்பது வேற ஒருவன் காதலிக்காக வடை மடிச்ச குமுதம் பேப்பர்ல பாத்து  சொல்றதோட முடிஞ்சு போச்சு. தமிழ் செய்தித்தாள் வாசிப்பது அவமானமாம். இதெல்லாம் யார் வளத்து விடறாங்கனு தெரியலை.


தெரிஞ்சே தான் சொன்னாங்க போல இருக்கு 

தமிழ் இனி மெல்லச்சாகும்.

6 comments:

 1. தமிழ் இனி மெல்லச்சாகும் - the thing would be Tamil would become like Malay, spoken in malaysia.. it doesn`t have script written... it adopts english or Latin alphabets to its native language... the cruelty to a traditional and beautiful language due to mimicked westernization by their people.. i hope it doesn`t happen to Tamil too.. in the future..

  ReplyDelete
 2. Awesome. :) Much needed post. (check for the very little ezhuthupilaigal when yu post next time!) :) romba nalla iruku, wish I had writing skill as you. :)

  ReplyDelete
 3. நான் தமிழ் படிக்க கத்துக்கிட்டதே,5th class to 6th class,போறப்ப தான். அதுகூட, எங்கப்பாவுக்கு தமிழ்நாடுக்கு transfer ஆனதுனால. என்னுடைய கருத்து என்னன்னா,தமிழ் செய்தித்தாள், படிப்பது மோசம் இல்லை, அதுல வர செய்தி தான் மோசம்.நீங்க ஒரு நல்ல செய்திதாள் சொல்லுங்க பாப்போம். தினமலர், தினத்தந்தில, கற்பழிப்பு , கொலை தவிர வேற ஒண்ணும் இருக்காது. தினமணி, எதோ இருக்கும். நான் என்னுடைய, படிக்கும் தமிழ improve செய்வதற்கு, தினத்தந்தி படிச்சு, அந்த பேப்பரை எங்க அப்பா ஆபீஸ்லேருந்து எடுத்துட்டு வருவதை நிறுத்திட்டாங்க. நான் படிச்ச நியூஸ் கற்பழிப்பு சம்பந்தமானது.(that was during 6th standard). கல்கி மட்டும் தான் எல்லாரும் படிக்கலாம். ஆனந்த விகடன், குமுதம் , குங்குமம், எல்லாம் சினிமா தான். தமிழ் புத்தகங்கள் வேணுமனா படிக்கலாம்.

  ReplyDelete
 4. Intha post ellarum padikkanum.. purinjukkanum...

  Ennoda niraiya friends cousins ellarume, thamizh pesa theriyum aana padikka theriyathu..

  pesa theriyum aana pesa matengranga.. yennu puriyala....

  ReplyDelete
 5. சிட்னி ஷெல்டன், க்ரிஷம் எல்லாம் படிச்சா கெத்து... சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் படிச்சா கேவலம் நு நெனைப்பு மாற வேண்டும். எவ்ளோ நல்ல literature இருக்கு நம்ம தமிழில். அதெல்லாம் யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க.
  இந்த நிலைமை மாறவில்லை என்றால் தமிழ் மெல்ல அல்ல, வேகமாகவே சாகும்!

  ReplyDelete
 6. ஒரு காலத்துல தமிழ் நல்ல எழுதுவேன். பிறகு மறந்துவிட்டது. ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு பிடித்த தமிழ் பாடல் வரிகளை தினம் ஒரு பாடு என்று எழுதினேன். இப்பொழுது மெல்லமாக என் தமிழ் எழுது தரம் உயர்ந்திருக்கிறது

  தினம் ஒரு பக்கம் படித்தால் போதும். மெதுவாக தமிழ் பற்றை வளர்க்கலாம்

  ReplyDelete