'மரியான்' திரைப்படத்தின் 'எங்க போன ராசா' பாடல் ஒரு ஐந்து மணி தொடங்கி மனதை பிசைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் காதல் வலியை அழகாகவும் அந்த வலியை நாமே உணரும்படியாகவும் வார்த்தைகளும் இசையும் அமைத்துக்கொடுத்துள்ளனர்.
நான் அதை ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் எழுத முனைந்துள்ளேன்.
முன்னெச்சரிக்கையாக ரகுமான் மற்றும் குட்டி ரேவதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
**********
எங்க போன ரோசா
சாயங்காலம் ஆச்சே,
நேரமாகி போச்சு,
நெஞ்சு எரிவாயே
நீ இல்லாம போனா,
தரிசு நிலமாகும்,
வாழ்க்க தரிசு நிலமாகும் நீ இல்லாம போனா,
நெஞ்சு நஞ்சாகும்,
இந்த நெஞ்சும் நஞ்சாகும்
என்ன செய்ய ரோசா,
உன்மத்தம் ஆச்சே,
எங்க போன ரோசா
வானம் தலைக்குமேல் இருளுது
மௌனமும் எனக்குள் கொல்லுது
என் மனம் உன்குரல் தேடுது
ஏனோ எனக்கென்ன கேடிது
எங்க போன ரோசா,
நா என்ன செய்ய ரோசா
எங்க போன ரோசா,
நா என்ன செய்ய ரோசா
என் வாழ்க்க வீணாகுதே
Good one :)
ReplyDeleteThank you for sharing with us.
ReplyDelete